4
‘டிட்வா’ சூறாவளியால் சேதமடைந்த 14 பாலங்களை புனரமைப்பதற்கான திட்டத்திற்கு சீனா நிதியுதவி வழங்க உள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சேதமடைந்துள்ள பாலங்களை புனரமைப்பதற்காக சீன மக்கள் குடியரசு RMB 79 மில்லியன் நிதியுதவியை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
இத்திட்டம் இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. முதலாவது கட்டத்தில் 9 பாலங்கள் 18 மாதங்களுக்குள் புனரமைக்கப்பட உள்ளன.
இதற்கான ஒப்பந்தத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கும் சீன மக்கள் குடியரசுக்கும் இடையில் கைச்சாத்திடுவதற்கும், திட்டத்தை இலங்கை அரசின் குறிப்பிட்ட திட்டமாக அறிவிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

