News
சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை; இலங்கையர்களுக்கு சற்று மகிழ்ச்சி செய்தி

இலங்கையில் கடந்த சில வாரங்களுடன் ஒப்பிடுகையில் இன்று தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.
அதன்படி, 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 322,000 ரூபாயாக பதிவாகி உள்ளது.
22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 298,000 ரூபாயாக குறைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரங்களில் 24 கரட் ஒரு பவுண் தங்கத்தின் விலை 400,000கடந்த நிலையில் தற்போது சுமார் 80,000 வரை குறைந்துள்ளது.
நான்கு இலட்சம் என்ற உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை, இனி பழைய நிலைக்கு திரும்பாது என தெரிவிக்கப்பட்ட போதிலும், தற்போது 22 கரட் தங்கம் மூன்று இலட்சத்திலிருந்து குறைந்துள்ளமை சற்று மகிழ்ச்சியை கொடுத்துள்ளது




