News

இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையில் நிலவி வரும் மோதலினால் இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்காக இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் பணிபுரிந்து மீண்டும் இஸ்ரேலுக்குள் நுழையும் எதிர்பார்ப்புடன் இலங்கைக்குத் திரும்பிய இலங்கையர்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் தற்போது நிலவும் பதற்றமான சூழ்நிலையை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள இலங்கை தூதரகம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு அருகிலும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.

Related Articles

Back to top button