Sri Lanka News

கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தர் நியமனம்.

திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று கமு/திகோ/கோளாவில் விநாயகர் மகாவித்தியாலயத்தின் நீண்டநாள் தேவையாக இருந்து வந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் நியமனம் இன்று (01) புதன்கிழமை இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை அதிபர் த. ராசநாதன் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கான நியமனக் கடிதத்தை வழங்கி வைத்தார்.

பாடசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் இல்லாத குறைபாடு நீண்டகாலமாக நிலவி வந்த நிலையில், அதன் அவசியத்தை உணர்ந்த பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க, இப்பாடசாலையின் பழைய மாணவரும் தற்போது சுவிட்சர்லாந்தில் வசித்து வருபவருமான திரு. தி. ஜசோதரன் அவர்களின் நிதியுதவியுடன் இந்நியமனம் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் பாடசாலை பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் இ.ங சுவர்ணராஜ், உறுப்பினர் எஸ். சுஜீகாந்த், ஆசிரியர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் கலந்துகொண்டனர்.

இந்நியமனம் பாடசாலையின் பாதுகாப்பையும் ஒழுங்கு நடவடிக்கைகளையும் மேலும் வலுப்படுத்தும் என பாடசாலை சமூகத்தினர் நம்பிக்கை தெரிவித்தனர். மேலும், இத்தேவையை நிறைவேற்ற நிதியுதவி வழங்கிய பழைய மாணவர் திரு. தி. ஜசோதரன், இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்த பாடசாலை பழைய மாணவர் சங்கத்திற்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Related Articles

Back to top button