Sri Lanka News

சுரேஷ் சாலேயின் மனைவி மனோரி சாலே, தேசிய அதிகார சபையிடம் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்

முன்னாள் புலனாய்வுப் பணிப்பாளர் சுரேஷ் சாலேயின் மனைவியான மனோரி சாலே, குற்றங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையிடம் முறைப்பாடு ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துடன் (CID) தொடர்புடைய சிவில் உடையணிந்த நபர் ஒருவர், தன்னையும் தனது இரு பிள்ளைகளையும் தொடர்ச்சியாகக் கண்காணித்து வருவதாக அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, நேற்று (ஜூன் 20) தனது 17 வயது மகளும் 22 வயது மகனும் தந்தையின் நலனை விசாரிக்க தேசிய வைத்தியசாலைக்குச் சென்றிருந்த போது, அந்த நபர் அவர்களைப் பின்தொடர்ந்து சென்று கைப்பேசியில் புகைப்படம் மற்றும் காணொளி எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் தேசிய வைத்தியசாலை மற்றும் CID வளாகத்திற்கு அருகில் அந்த நபர் நடமாடியதை அவதானித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள மனோரி சாலே, இது குறித்து சுயாதீன விசாரணை ஒன்றை நடத்தி, சம்பந்தப்பட்ட நபர் யார் என்றும், அவர் யாருடைய உத்தரவின் கீழ் செயற்பட்டார் என்றும் கண்டறியுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

Back to top button