Sri Lanka News

போக்குவரத்து அமைச்சின் செயலாளர் பதவி விலகல்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா பதவி விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கபில பெரேரா தமது தீர்மானம் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கும் விளக்கமளித்துள்ளதாகவும், செயலாளர் பதவியில் இருந்து விலகுவது குறித்து பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவருக்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள பின்னணியில், அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, செயலாளர் பதவியில் இருந்து விலகிய பின்னர், பேராசிரியர் கபில பெரேரா மீண்டும் பல்கலைக்கழக சேவையில் இணைவதற்கு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் உபவேந்தராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button