World News

அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்ட தென்கொரியர்கள்!

ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேலியப் படைகள் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் உலக நாடுகளிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, தென்கொரியத் தலைநகர் சியோலில் அமெரிக்காவிற்கு எதிராக ஒரு நூதனமான மற்றும் ஆவேசமான போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சியோலில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு வெளியே திரண்ட நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள், அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளைக் கண்டித்து முழக்கமிட்டனர்:

போரில் சிந்தப்படும் அப்பாவி மக்களின் இரத்தத்தைக் குறிக்கும் வகையில், போராட்டக்காரர்கள் தங்கள் கைகளில் சிவப்பு வண்ணத்தைப் பூசிக்கொண்டு கைகளை உயர்த்திப் போராடினர்.

“அமெரிக்காவே போரை நிறுத்து!”, “இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்குத் துணை போகாதே!” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அவர்கள் தூதரகத்தை முற்றுகையிட்டனர்.

அமெரிக்கத் தூதரகத்தைச் சுற்றி போராட்டக்காரர்கள் குவிந்ததால், சியோல் காவல்துறையினர் அங்கு பலத்த பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

Related Articles

Back to top button