Sports

தியாகோ ஜோடாவுக்கு கௌரவம் – 148 ஆண்டுகால விதியை மாற்றிய விம்பிள்டன்

லிவர்பூல் கிளப் கால்பந்து அணியின் வீரர் தியாகோ ஜோடா உயிரிழந்த சம்பவத்திற்காக அந்நாட்டு வீரருக்கு கறுப்புப் பட்டை அணிய தனது 148 ஆண்டுகால விதியை விம்பிள்டன் மாற்றிக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த தியாகோ ஜோடாவும் அவரது சகோதரர் ஆண்ட்ரே சில்வாவும் லம்போகினி என்ற காரில் ஒன்றாக பயணிக்கும்போது ஸ்பெயினில் ஜமோரா என்ற இடத்தில் விபத்து ஏற்பட்டு இருவருமே உயிரிழந்தார்கள்.

பலரும் இவருக்கு இரங்கலை தெரிவித்துவரும் நிலையில், விம்பிள்டன் நிர்வாகம் இவரை கௌரவிக்கும் பொருட்டு 148 ஆண்டுகால விதியை மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

டென்னிஸ் வீரர்கள் தங்களது வெள்ளை உடையில் கறுப்பு நிற பட்டை அணிந்து விளையாட விம்பிள்டன் அனுமதி அளித்துள்ளதாக ஆங்கில இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் பிரான்சிஸ்கோ காப்ரல், விம்பிள்டனில் இரட்டையர் பிரிவில் விளையாடி வருகிறார்.

முதல்சுற்றில் 7-6, 6-3 என இவரது இணை வென்ற நிலையில், போட்டிக்குப் பிறகு உயிரிழந்த தியாகோ ஜோடா குறித்து மிகவும் உருக்கமாக பேசினார்.

Related Articles

Back to top button