World News

பெல்ஜியத்தில் ரயில் – பாடசாலை பேருந்து மோதி விபத்து

பெல்ஜியத்தில் பாடசாலை பேருந்து ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில், இரண்டு பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர்.

ரயில் கடவுப்பாதை (கேட்) மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், பாடசாலை பேருந்தின் சாரதி பேருந்தை ரயில் தண்டவாளத்தின் குறுக்கே செலுத்த முயன்றதே இந்த விபத்துக்குக் காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் பேருந்தின் சாரதியும் பெண் உதவியாளரும் அடங்குவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

விபத்து நடந்த நேரத்தில் பேருந்தினுள் 7 பாடசாலை மாணவர்கள் பயணித்துள்ளதுடன், அவர்களில் சில மாணவர்கள் பலத்த காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button