World News

உக்ரைன் போரில் 6,000 வடகொரிய வீரர்கள் பலி

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவிற்கு ஆதரவாகப் பங்கேற்ற சுமார் 6,000 வடகொரிய இராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த போர் மோதல்களுக்காக சுமார் 15,000 வடகொரிய இராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, போரின் போது உக்ரைனியப் படைகளிடம் பிடிபடவிருந்த சந்தர்ப்பத்தில், வடகொரிய இராணுவ வீரர் ஒருவர் கைக்குண்டை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இந்தச் செயலை வடகொரியத் தலைவர் கிம் ஜொன் உன் பாராட்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button