News

வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு சாரதி அனுமதிப்பத்திரம்: யாழ். உள்ளிட்ட இடங்களில் புதிய வசதி

வெளிநாட்டுப் பிரஜைகள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டை குடியுரிமை கொண்ட இலங்கையர்களுக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்கும் சேவை மேலும் 5 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் (DMT) நேற்று (02) அறிவித்துள்ளது.

மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க இது தொடர்பான மேலதிக விபரங்களை வெளியிட்டுள்ளார்.

இதுவரை வெரஹெர (Werahera) அலுவலகம் மற்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய அலுவலகம் ஆகியவற்றில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த சேவை, இனிவரும் காலங்களில் யாழ்ப்பாணம், குருநாகல், ஹம்பாந்தோட்டை, கம்பஹா மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்ட அலுவலகங்களிலும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்லுபடியாகும் வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டுள்ள நபர்கள், இலங்கையில் தற்காலிகமாக வாகனங்களைச் செலுத்துவதற்காக இந்த உரிமத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, இலங்கையின் நிரந்தர சாரதி அனுமதிப்பத்திரத்தைப் பெற விரும்புவோர், தொடர்ந்தும் வெரஹெரவிலுள்ள பிரதான சாரதி அனுமதிப்பத்திர அலுவலகத்திற்கே செல்ல வேண்டும் என ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வசதி கருதி இந்தச் சேவை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button