World News
ஹோர்முஸ் நீரிணை பதற்றம்: அமெரிக்க தாக்குதல்களுக்கு பதிலடி நடவடிக்கையல் ஈரான்

அமெரிக்கா, ஈரானின் சில இராணுவ இலக்குகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தியதையடுத்து, ஹோர்முஸ் நீரிணை அனைத்து கப்பல் போக்குவரத்திற்கும் மூடப்பட்டுள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது.
அதேவேளை, தமது தாக்குதல் நடவடிக்கைகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், ஹோர்முஸ் வழியாக வணிகக் கப்பல்களின் போக்குவரத்து தொடர்வதாகவும் அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது.
இந்த முன்னேற்றம் மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளதுடன், உலக எண்ணெய் சந்தைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



