World News

குவைத்தின் Salmi பகுதியிலும் இன்று அதிகாலையில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது:

குவைத்தின் சல்மி பகுதியில் உள்ள நாயெம் ஸ்கிராப் வாகனங்கள் சேகரிப்பு மையத்தில் இன்று(14/06/26) ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தை Shaqaya, Jahra, Kazima, Bidda,-Harfiya மற்றும் Istiklal ஆகிய 6 தீயணைப்பு மையங்களைச் சேர்ந்த தீயணைப்புப் படை வீரர்கள் குழுவாக செயல்பட்டு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த பயங்கரமான தீ விபத்தில் அதிஷ்டவசமாக உயிரிழப்புகள் மற்றும் காயங்கள் யாருக்கும் ஏற்படவில்லை. இதற்கிடையே இன்று அதிகாலையில் Subhan பகுதியில் வாகனம் கவிழ்ந்து தீப்பிடித்த சம்பவத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதேபோல் Qairawan பகுதியிலுள்ள ஒரு வீட்டில் நேற்று(13/06/26) சனிக்கிழமை மாலையில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் 2 பேர் காயமடைந்தனர், இதையடுத்து அவர்கள் சிகிசைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

Related Articles

Back to top button