Sri Lanka News

மோசமான வானிலையால் 204 வீடுகள் சேதம்! 5277 பேர் கடுமையாகப் பாதிப்பு

இலங்கையில் அண்மையில் நிலவிய மோசமான வானிலை காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் இன்று (18) காலை 10.00 மணி வரையான நிலவரப்படி, அண்மைய மோசமான வானிலையால் 13 மாவட்டங்களில் 204 வீடுகள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

அதேநேரம், 14 மாவட்டங்களில் உள்ள 1585 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 5277 பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

42 குடும்பங்களைச் சேர்ந்த 135 நபர்கள் இரண்டு தற்காலிகப் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இரண்டு உயிரிழப்புகளும் ஒரு காயமும் பதிவாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button