Sri Lanka News

மகிழ்ச்சித் தகவல் : இன்று அதிரடியாகக் குறைந்த விலை

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களுக்கு மத்தியில், இலங்கையின் உள்நாட்டுச் சந்தையிலும் தங்கத்தின் விலையில் இன்று (12) குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

நேற்றுடன் ஒப்பிடுகையில் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 3,000 ரூபாயால் குறைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி,24 கரட் தங்கம் பவுண் ஒன்று 412,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

22 கரட் தங்கம் பவுண் ஒன்று 381,000 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.

Related Articles

Back to top button