Sri Lanka News

எரிபொருள் விலை அதிகரிப்பின் எதிரொலி – போக்குவரத்து கட்டணங்களும் உயரும் வாய்ப்பு!

எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து டீசல் விலை அதிகரித்துள்ளதால், பாடசாலைப் போக்குவரத்து கட்டணங்களையும் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை பாடசாலைப் போக்குவரத்துச் சங்கத்தின் செயலாளர் மல்ஸ்ரீ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டணத் திருத்தத்தை ஒரு குறிப்பிட்ட சதவீதமாக அதிகரிக்காமல், பெற்றோருடன் கலந்துரையாடி ஓரளவுக்கு உயர்த்துவதற்கு எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் டீசல் விலை உயர்த்தப்பட்ட போதும், பெற்றோரின் நிலையைக் கருத்திற்கொண்டு போக்குவரத்து கட்டணங்களை அதிகரிக்கவில்லை.

எனினும், தற்போது ஏற்பட்டுள்ள சிரமங்களைக் கருத்திற்கொண்டு இம்முறை ஒரு குறிப்பிட்ட தொகையினால் கட்டணத்தை அதிகரிக்க நேரிடும் என செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் கூட, பேருந்துக் கட்டணத்தில் எவ்வித திருத்தங்களும் மேற்கொள்ளப்படமாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு மேலதிக சுமை ஏற்படாமல் பாதுகாப்பதற்காக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், எரிபொருள் விலை உயர்வின் தாக்கம் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேவையெனில் எதிர்காலத்தில் பொருத்தமான முடிவுகள் எடுக்கப்படும் எனவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button