Sports

1975 உலகக் கிண்ண நாயகன் பெர்னார்ட் ஜூலியன் காலமானார்!

1975 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் ஒருநாள் உலகக் கிண்ணத்தை வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முக்கியப் பங்கு வகித்த முன்னாள் சகலதுறை வீரர், பெர்னார்ட் ஜூலியன் தமது 75 ஆவது வயதில் காலமானார்.

டிரினிடாட்டின் வால்சேனில் அவர் காலமானாதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

1975 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்றபோது, இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜூலியன் முக்கியப் பங்களித்தார்.

இலங்கைக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுடன்,நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் 4/27 என்ற சிறப்பான பந்துவீச்சு பெறுதியையும் பதிவு செய்தார்.

அத்துடன், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், அழுத்தமான சூழ்நிலையில் 26 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பங்களித்தார்.

அவர் 24 டெஸ்ட் போட்டிகளில் 866 ஓட்டங்களை பெற்றதுடன். 50 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதேநேரம், 12 ஒருநாள் போட்டிகளில் 86 ஓட்டங்களை பெற்றதுடன் 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

Related Articles

Back to top button