Sri Lanka News

தங்கத்தின் விலை மீண்டும் குறைவு; ஒரே நாளில் 4,000 ரூபா வீழ்ச்சி

இலங்கையில் தங்கத்தின் விலையை நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தினர் வெளியிட்ட தரவுகளின்படி, நேற்று (13) 410,000 ரூபாவாக இருந்த 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 406,000 ரூபாவாகக் குறைந்துள்ளது.

அதன்படி 24 கரட் தங்கத்தின் விலையில் 4,000 ரூபா வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதேவேளை, நேற்று 379,200 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை இன்று 375,500 ரூபாவாகக் குறைந்துள்ளது.

இதன்மூலம் 22 கரட் தங்கத்தின் விலையில் 3,700 ரூபா குறைவு பதிவாகியுள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்படும் மாற்றங்களின் தாக்கத்தால் இலங்கையில் தங்க விலையில் இவ்வாறு ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Back to top button