India NewsSri Lanka News

கேரளாவிலிருந்து இலங்கை வந்த விசேட வைத்தியக் குழு!

திட்வா’ புயலினால் பாதிக்கப்பட்டு பதுளை மாவட்டத்திலுள்ள “சுரக்ஷா” முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு அத்தியாவசிய மருத்துவ வசதிகளை வழங்குவதற்காக, இந்தியாவின் கேரள மாநிலத்திலிருந்து 5 விசேட வைத்தியர்கள் அடங்கிய குழுவொன்று இன்று (23) நாட்டை வந்தடைந்துள்ளது.

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கவின் அழைப்பின் பேரிலேயே இந்தக் குழுவினர் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வைத்தியர்கள் கலந்துகொள்ளும் மருத்துவ முகாம் நாளை (24) மற்றும் நாளை மறுதினம் (25) ஆகிய நாட்களில் நடைபெறவுள்ளதுடன், இதில் உள்நாட்டு வைத்தியர்கள் உட்பட 25 பேர் கொண்ட குழுவினரும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்த விசேட வைத்தியர்கள் குழுவினர் இன்று (23) மாலை 04.15 மணியளவில் இந்தியாவின் சென்னையிலிருந்து இண்டிகோ விமானச் சேவையின் 6E-1179 இலக்க விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

Related Articles

Back to top button