Sri Lanka News

கபில சந்திரசேனவின் உயிரிழப்பு – மேலதிக நீதவான் பரிசோதனை!

கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்மமான முறையில் உயிரிழந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் குறித்த மேலதிக நீதவான் விசாரணை, எதிர்வரும் 9ஆம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விசாரணை இன்று (05) கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மறைந்த கபில சந்திரசேனவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு ஒன்றில் ஆஜராகியிருந்த ஜனாதிபதி சட்டத்தரணி ரியென்சி அர்சகுலரத்ன மற்றும் அவரது உதவி சட்டத்தரணி உதார முஹந்திரம்கே ஆகியோரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் சாட்சியமும் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, மேலதிக சாட்சி விசாரணை இம்மாதம் 9ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button