Sri Lanka News
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மர நடுகை நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர்

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறை பிரதேச சபையுடன் மின்மினி கல்வி, பொருளாதார அபிவிருத்தி, சமூக சேவை அமைப்பு இணைந்து ஏற்பாடு செய்த பயன்தரும் மர நடுகை நிகழ்வு சம்மாந்துறை பிரதேச சபையின் கெளரவ தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் தலைமையில் செந்நெல் கிராம வாசிப்பு நிலைய வளாகத்தில் (2026.06.05 ) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் செயலாளர் யூ.எல். அப்துல் மஜீட், தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.எம்.எம். முஸ்தபா, மின்மினி மின்ஹா மீட்சி சமூக சேவை அமைப்பின் ஸ்தாபகர் மின்மினி மின்ஹா, சிரேஷ்ட ஊடகவியலாளர் தேசபந்து ஜலீல் ஜீ, செந்நெல் கிராம வாசிப்பு நிலைய பொறுப்பாளர் நௌசாத் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டி நிகழ்வை சிறப்பித்தனர்.




