News

குறைந்த விலையில் தேங்காய்

உள்நாட்டுச் சந்தையில் தேங்காயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக, 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தேங்காய் ஒன்று, தற்போது 100 ரூபாய் முதல் 170 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், விற்பனை அதிகரித்துள்ளதாகவும் விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் எதிர்வரும் மாதங்களில் தேங்காய் விலை மேலும் வீழ்ச்சியடையக் கூடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேநேரம் தற்போது, சந்தையில் தேவைக்கு மேலதிகமாக தேங்காய் இருப்பு அதிகரித்துள்ளதாக விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.

Related Articles

Back to top button