News

அதிரடியாக உயர்ந்த தங்க விலை இன்றைய சர்வதேச நிலவரம் என்ன?

சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் மற்றும் மத்திய கிழக்கில் நிலவிவரும் போர்ச் சூழல் காரணமாக, உலகளாவிய ரீதியில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் இன்று (21) கணிசமான அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளன.

அமெரிக்க டொலரின் பலம் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த திடீர் விலை மாற்றத்திற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,550.06 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், வெள்ளி ஒரு அவுண்ஸ் இன்றையதினம் 76.29 டொலராக விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.

எனினும், சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி விலை உயர்வு காரணமாக, இன்று இலங்கையின் உள்நாட்டு சந்தையிலும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.

Related Articles

Back to top button