வீரமுனையில் சிறப்பாக நடைபெற்ற சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலய மகா கும்பாபிஷேகம்

அம்பாறை மாவட்டத்தின் வீரமுனை கிராமத்தில் புனரமைக்கப்பட்ட சுயம்புலிங்க ஸ்ரீ வழிபாட்டுப் பிள்ளையார் ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா இன்று (12) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேக பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் சுப வேளையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற நிலையில் இன்று காலை சுமார் 10 மணியளவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டது.
இவ்விழாவை முன்னிட்டு கடந்த வியாழக்கிழமை கணபதி ஹோமம் மற்றும் கர்மாரம்ப நிகழ்வுகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து 10.04.2026 வெள்ளிக்கிழமை மற்றும் 11.04.2026 சனிக்கிழமை ஆகிய தினங்களில் எண்ணெய்க்காப்பு சாத்தும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் ஆலய தலைவர் பொன். ரமேஷ், செயலாளர் குமரேசன், பொருளாளர் யோகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழிபட்டதுடன், பெருமளவிலான பக்தர்களும் இணைந்து வழிபட்டனர்.
#SocialTv #NewsUpdate #SriLankaNews







