Sri Lanka News

சாய்ந்தமருதில் பலவீதிகளின் அபிவிருத்திப் பணிகள் ஆதம்பாவா எம்.பி.யினால் ஆரம்பித்து வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட கிராமிய வீதிகளுக்கான அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று (11) திங்கட்கிழமை இடம்பெற்றது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வானது அம்பாறை மாவட்ட கரையோரப் பிரதேச அபிவிருத்திக் குழுத் தலைவரும் இலங்கை அரசியலமைப்பு பேரவை உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இதன் போது சாய்ந்தமருது தண்டயல் வீதி, பலாஹ் பள்ளி வீதி, தோணா ஈஸ்ட் (East) வீதி, போக்கடி குறுக்கு வீதி ஆகிய வீதிகளுக்கான அபிவிருத்திப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், பிரஜா சக்தி தவிசாளர்கள், உறுப்பினர்கள், தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

மக்களின் நீண்டகால கோரிக்கைகளில் ஒன்றான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இவ்வாறான அபிவிருத்தித் திட்டங்கள், பிரதேசத்தின் முன்னேற்றத்திற்கும் மக்கள் நலனுக்கும் பெரும் பங்களிப்பாக அமையும் எனவும் ஆதம்பாவா எம்.பி.க்கு மக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button