Sri Lanka News

உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்: தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீட்டுக்கு ஆதம்பாவா எம்.பியினால் அடிக்கல் நட்டி வைப்பு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசம் உட்பட தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” எனும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பயனாளிகள் புதிய வீடுகளை அமைத்துக் கொள்வதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் பெரியநீலாவணை, கல்முனை, மாளிகைக்காடு, ஒலுவில், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளின் வீடுகளுக்கு அடிக்கல் நடும் நிகழ்ச்சித்திட்டம் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களின் ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும், அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரும், பாராளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவாவினால் இன்று (26) ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், அம்பாறை மாவட்ட தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர்கள், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் பொறியியலாளர்கள் மற்றும் அதிகாரிகள், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

Back to top button