Sri Lanka News

இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

நாட்டில் இன்று இரு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குருநாகல் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (23) பிற்பகல் 4:00 மணி முதல் நாளை (24) பிற்பகல் 4:00 மணி வரை இந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அமுலில் இருக்குமாறு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, குருநாகல் மாவட்டத்தில் ரிதிகம பிரதேச செயலகப் பிரிவு, இரத்தினபுரி மாவட்டத்தில் குருவிட்ட, கலவானை, இரத்தினபுரி, நிவித்திகலை, பெல்மதுளை மற்றும் எஹலியகொடை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button