Sri Lanka News

நாளை பல பகுதிகளுக்கு அதிக வெப்பநிலை எச்சரிக்கை

நாளை (30) பல பகுதிகளில் பகல் வேளையில் வெப்பச் சுட்டெண், மனித உடலுக்கு உணரப்படும் வெப்பமானது “கவனம் செலுத்த வேண்டிய” மட்டத்தில் காணப்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

வடமத்திய, கிழக்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் குருநாகல், மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இவ்வாறான வெப்பமான காலநிலை நிலவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தங்கள் குறித்த முன்னெச்சரிக்கை மையத்தினால் நாளை தினத்திற்காக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button