World News

33 நாட்களாகத் தொடரும் இணைய முடக்கம் – இணையத்தை பயன்படுத்தினால் சிறை?

ஈரானில் இணைய சேவை முடக்கப்பட்டு இன்றுடன் 33 நாட்கள் நிறைவடைந்துள்ளன.

சுமார் 768 மணித்தியாலங்களுக்கும் மேலாக ஈரான் மக்கள் வெளியுலகத்துடனான தொடர்பின்றித் தவித்து வருவதாக இணையக் கண்காணிப்புக் குழுவான ‘நெட் பிளாக்ஸ்’ (NetBlocks) தெரிவித்துள்ளது.

ஈரானில் தற்போது சாதாரண நிலையை விட வெறும் 1 சதவீத அளவிலேயே சர்வதேச இணையத் தொடர்பு காணப்படுகிறது.

வெளியுலகத்துடனான எஞ்சியிருக்கும் தகவல் தொடர்பு வழிகளையும் முடக்கும் நோக்கில், செயற்கைக்கோள் முனையங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்தநாட்டு அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளதாக ‘நெட் பிளாக்ஸ்’ சுட்டிக்காட்டியுள்ளது.

BBC ஊடகத்தின் தகவல்படி, ஈரானின் சில உயர் அதிகாரிகள், ஆளும் தரப்பு ஆதரவாளர்கள் மற்றும் ஒரு சில ஊடகவியலாளர்கள் மாத்திரம் எவ்வித கட்டுப்பாடுகளுமின்றி இணையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

ஏனையோர் இணையத்தைப் பெற பெருந்தொகையான பணத்தைச் செலவிட்டு வருவதாகத் தெரிகிறது.தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில், ஒரு சிலர் ‘ஸ்டார்லிங்க்’ போன்ற செயற்கைக்கோள் இணைய வசதி மற்றும் இதர மாற்று வழிகள் மூலம் இணையத்தைப் பெற்று வருகின்றனர்.

இருப்பினும், ஈரானில் ஸ்டார்லிங்க் சாதனத்தைப் வைத்திருப்பது அல்லது அதைப் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால், அதற்கு இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button