Sports

34 ஆண்டுகள் கழித்து ஒரு நாள் தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்..!

வெஸ்ட் இண்டீஸ் – பாகிஸ்தான் அணிகள் மோதிய 3 ஆவது ஒருநாள் போட்டி நேற்று (12) நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 294 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக கப்டன் ஹோப் 120 ஓட்டங்கள் குவித்தார்.

இதனையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்து 92 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன்மூலம் 202 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 34 ஆண்டுகளுக்கு பிறகு கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அசத்தியது.

முன்னதாக இந்த ஒருநாள் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி 0 – 1 என பின்தங்கியிருந்த நிலையில், கடைசி இரு போட்டிகளில் வென்று 2 – 1 எனத் தொடரை வென்றுள்ளது.

Related Articles

Back to top button