News

கொழும்பில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டிகள்; இன்று அதிகாலை பரபரப்பு

கொழும்பு – தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள கட்டடம் ஒன்றிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் 6 முச்சக்கரவண்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீ விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

ஒரு முச்சக்கரவண்டி மீது தீ பற்றியதை அடுத்து அருகில் நின்ற முச்சக்கரவண்டிகளுக்கு தீ பரவி இந்த விபத்து ஏற்பட்டதாக என பொலிஸார் தெரிவித்தனர்.

மாநகர சபையின் தீயணைப்பு படையினர் இணைந்து தீ பரவலை கட்டுப்படுத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்தின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தெமட்டகொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தலைமை ஆய்வாளர் கபில பண்டாரவின் அறிவுறுத்தலின் பேரில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Related Articles

Back to top button