World News

மத்திய கிழக்கின் தோல்வியாளர் ஈரான்” – டொனால்ட் ட்ரம்ப் கடும் சாடல்

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் காரணமாக ஈரான் நிலைதடுமாறிப் போயுள்ளதாகவும், தனது அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரி சரணடைந்துள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:”கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் ஈரான், தனது மத்திய கிழக்கு அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரி சரணடைந்துள்ளது.

அத்துடன், இனி அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை என்றும் உறுதியளித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்கள் காரணமாகவே இந்த வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கு முழுவதையும் கைப்பற்றி ஆள வேண்டும் என்பதே ஈரானின் நோக்கமாக இருந்தது.””ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் முதன்முறையாக ஈரான் தனது அண்டை நாடுகளிடம் தோற்றுப் போயுள்ளது. இதற்காக அந்த நாடுகள் எனக்கு நன்றி தெரிவித்துள்ளன.

அதற்கு ‘உங்களை வரவேற்கிறேன்’ என நான் பதிலளித்துள்ளேன். ஈரான் இனி மத்திய கிழக்கின் ‘ரௌடி’ அல்ல; மாறாக அவர்கள் ‘மத்திய கிழக்கின் தோல்வியாளர்’ . அவர்கள் முழுமையாகச் சரணடையும் வரை அல்லது வீழ்ச்சியடையும் வரை பல தசாப்தங்களுக்கு இதே நிலையே நீடிக்கும்.””இன்று ஈரான் மிகக் கடுமையாகத் தாக்கப்படும்.

ஈரானின் மோசமான நடத்தை காரணமாக, இதுவரை இலக்கு வைக்கப்படாத பகுதிகள் மற்றும் குழுக்கள் மீது முழுமையான அழிவை ஏற்படுத்தும் வகையிலான தாக்குதல்கள் நடத்தப்படுவது குறித்து தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது” என டொனால்ட் ட்ரம்ப் தனது பதிவில் எச்சரித்துள்ளார்.

Related Articles

Back to top button