Sports

இங்கிலாந்தை வீழ்த்தி T20 உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது இந்தியா!

.T20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.

மும்பையில் நடைபெற்ற விறுவிறுப்பான அரையிறுதிப் போட்டியில், முதலில் துடிப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 253 ஓட்டங்களைப் பெற்று இமாலய இலக்கை நிர்ணயித்தது. அதிரடியாக ஆடிய சஞ்சு சாம்சன் 89 ஓட்டங்களை குவித்துள்ளார்.

பதிலுக்கு ஆடிய இங்கிலாந்து அணி, ஜேக்கப் பெத்தேலின் சதத்தால் கடும் சவாலளித்த போதிலும், 20 ஓவர்களில் 246 ஓட்டங்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா, வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்துடன் மோதவுள்ளது.

Related Articles

Back to top button