News

பனிப்புயலில் சிக்கித்தவிக்கும் அமெரிக்கா!

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடந்த 22 ஆம் திகதி மாலையில் இருந்து பனிப்புயல் வீசத்தொடங்கியது. இதன் காரணமாக அங்கு ஒன்பது ஆண்டுகளுக்கு பிறகு ‘ப்ளிசர்டு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

பனிப்புயல் தாக்கத்தால், பட இடங்களில் பனி 3 அடி உயரம் வரை குவிந்தது. நியூஜெர்சி மாகாணத்தில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

கடும் பனிப்பொழிவு காரணமாக அவசர போக்குவரத்து தவிர அனைத்து போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடும் பனிப்பொழிவுடன் தீவிர புயல் வீசுவதால் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூ யார்க்கின் முக்கிய விமான நிலையங்களில் 11,000 இற்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.

அமெரிக்கா முழுவதும் 13,000 இற்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

நியூயார்க் நகர பள்ளிகள் முழுவதும் மூடப்பட்டன. மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதால், வடகிழக்கு அமெரிக்காவில் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட வடுகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

பாஸ்டன், கனெக்டிகட், மேரிலேண்ட், விர்ஜினியா உள்ளிட்ட மாகாணங்களிலும் பனிப்புயல் வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button