News

குமண தேசிய பூங்காவிற்குள் வேட்டையாடிய 6 பேர் கைது: படகு மூலம் இறைச்சி கடத்திய கும்பல் சிக்கியது!

குமண தேசிய பூங்காவிற்குள் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாடி, அவற்றின் இறைச்சியைப் படகு மூலம் கடத்திச் சென்ற ஆறு பேரை விசேட அதிரடிப்படையினர் (STF) கைது செய்துள்ளனர்.

அறுகம்பே விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட தொடர் சுற்றிவளைப்புகளின் போதே இந்தச் சந்தேகநபர்கள் பிடிபட்டுள்ளனர்.

அதிரடிப்படையினரின் இந்தச் சோதனையின் போது இரண்டு வெவ்வேறு இடங்களில் சட்டவிரோதப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன:

கடலாமை முட்டைகள்: கடற்கரைப் பகுதியில் வைத்து இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், அவர்களிடமிருந்து 57 கடலாமை முட்டைகள் மீட்கப்பட்டன.வனவிலங்கு இறைச்சி: மற்றுமொரு சோதனையில் 17 கிலோ கிராம் மானிறைச்சி, 56 கிலோ கிராம் காட்டு எருமை இறைச்சி மற்றும் 16 கிலோ கிராம் மான் மற்றும் எருமையின் ஈரல் என்பன கைப்பற்றப்பட்டன.

கடல் வழியாக இந்த இறைச்சிகளைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட ஒரு ஃபைபர் படகு, 25 குதிரைத்திறன் கொண்ட வெளிச்செல்லும் இயந்திரம் (Outboard engine) மற்றும் இரண்டு எரிபொருள் கொள்கலன்களும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட ஆறு சந்தேகநபர்களும், கைப்பற்றப்பட்ட இறைச்சி மற்றும் ஏனைய பொருட்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக லாகுகலை வனஜீவராசிகள் அலுவலகத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button