Sri Lanka News

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான அவசர அறிவிப்பு

இன்று நள்ளிரவு முதல் 2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடையும் வரை பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிகளை நடத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சை நிறைவடையும் வரை இந்தத் தடை அமுலில் இருக்கும்.

பாடங்கள் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் மற்றும் அனைத்து விதமான விளம்பர நடவடிக்கைகளுக்கும் தடை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த உத்தரவுகளை மீறிச் செயற்படுபவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை பொதுமக்கள் தமக்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திலோ 119 என்ற பொலிசாரின் அவசர அழைப்பு இலக்கத்தின் ஊடாகவோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற துரித அழைப்பு இலக்கத்தின் ஊடாகவோ வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button