Sri Lanka News

தங்கப் பிரியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! சர்வதேச மாற்றங்களால் உள்ளூர் சந்தையில் விலை வீழ்ச்சி!

நேற்று (23) 24 கரட் தங்கம் ஒரு பவுண் 382,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2,000 ரூபாயால் குறைந்து 380,000 ரூபாயாக பதிவாகியுள்ளது.

தற்போதைய சந்தை நிலவரப்படி, 22 கரட் தங்கம் ஒரு பவுண் 349,600 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 47,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 43,700 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச தங்க சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்கள் மற்றும் அமெரிக்க டொலரின் பெறுமதியில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள், உள்ளூர் தங்க விலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.

Related Articles

Back to top button