SportsSri Lanka News

குத்துச்சண்டை போட்டியில் நுவரெலியா- பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் மற்றுமொரு சாதனை.

மத்திய மாகாண கல்வித் திணைக்களம் நடத்தும் 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த மத்திய மாகாண குத்துச்சண்டைப் போட்டியில், நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மாணவர் திரு. C. யுவேந்திரன் (சீனியர் வயதுப் பிரிவு) 60–65 கிலோ எடைப்பிரிவில் இறுதிச்சுற்று வரை விளையாடி வெள்ளிப்பத்தை சுவீகரித்து பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் அரையிறுதியில் கண்டி கிங்ஸ்வுட் கல்லூரி வீரரை எதிர்கொண்டு வெற்றி பெற்று இறுதிச்சுற்றில் கண்டி தர்மராஜ கல்லூரியுடன் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இக்கல்லூரி மாணவி செல்வி R. சபீர்த்தனா (ஜூனியர் வயதுப் பிரிவு) 46–48 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதியில் கண்டி மகமாய கல்லூரி மாணவியை எதிர்கொண்டு வெற்றி பெற்றதோடு இறுதிசுற்றில் கண்டி தீரானந்த கல்லூரிக்கு எதிரான போட்டியில் பங்குபற்றி வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்விரு மாணவர்களுக்கும் பயிற்சி அளித்து அவர்களின் வெற்றிக்கு வழிகாட்டியாக இருந்த குத்துச்சண்டை பயிற்சியாளரும் ஆசிரியருமான திரு. அருளழகன் அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இம்மாணவர்களுக்கு தொடர்ச்சியாக வழிகாட்டுதலும் மேலதிகப் ஆலோசனைகளும் வழங்கிய நுவரெலியா கல்வி வலயத்தின் விளையாட்டுத்துறைக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் திரு. சுசந்த வீரசேன அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அத்தோடு இப்போட்டிக்கு பெண்மாணவிகளை அழைத்துச்செல்வதற்கும்,அவர்களுக்கான பாதுகாப்பினை வழங்குவதற்கும், மேலதிக பயிற்சிகளை வழங்குவதற்கும்,உதவி புரிந்த நுவரெலியா நல்லிளைப்பாற்றி கல்லூரியின் பெண் குத்துச்சண்டை பயிற்சியாளரான செல்வி வேஜினி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

மேலும் இப்போட்டியானது 2026 ஜூன் 4 முதல் 7 வரை கண்டி புனித சில்வஸ்டர் கல்லூரியில் நடைபெற்றது.

இப்போட்டியில் இறுதிசுற்றுவரை சென்று வெள்ளிப்பதக்கங்களை சுவீகரித்த இம்மாணவர்களுக்கு எமது மனமார்ந்த பாராட்டுக்கள்..

Related Articles

Back to top button