News

பல மாவட்டங்களுக்கு எச்சரிக்கை – வானிலையில் திடீர் மாற்றம்…!

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களுடன், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீட்டர் வரையிலான ஓரளவு பலத்த மழை பதிவாகும் வாய்ப்பும் உள்ளது.

அதேவேளை, மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் மணித்தியாலத்திற்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசும் சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம் மற்றும் திடீர் பலத்த காற்று காரணமாக ஏற்படக்கூடிய ஆபத்துகளை தவிர்க்க பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Related Articles

Back to top button