கிறிஸ் கெய்லின் 14 வருட சாதனையை உடைக்கப்போகும் 15 வயது வீரன்!

டி20 கிரிக்கெட்டின் ‘Universe Boss’ கிறிஸ் கெய்லின் வரலாற்றுச் சாதனையை முறியடிப்பதற்கு மிக அருகில் உள்ளார் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் 15 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி.
ஐபிஎல் தொடரின் இன்றைய ‘எலிமினேட்டர்’ (Eliminator) போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை ராஜஸ்தான் ரோயல்ஸ் எதிர்கொள்கின்றது.
2012 ஐபிஎல் தொடரில் கிறிஸ் கெய்ல் அடித்த 59 சிக்ஸர்களே ஒரு சீசனில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்ஸர் சாதனையாக உள்ளது.
தற்போது 53 சிக்ஸர்களுடன் இருக்கும் வைபவ், இன்றைய போட்டியில் இன்னும் 7 சிக்ஸர்கள் அடிக்கும் பட்சத்தில் கெய்லின் இந்த உலக சாதனையை முறியடிப்பார்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ராஜஸ்தான் தோற்கும் பட்சத்தில் தொடரை விட்டு வெளியேறும் என்பதால், வைபவ் சூர்யவன்ஷிக்கு கெய்லின் சாதனையை முறியடிக்கக் கிடைக்கும் கடைசி வாய்ப்பு இதுவாக அமையலாம்.
பீகாரைச் சேர்ந்த இந்த இளம் இடதுகை துடுப்பாட்ட வீரர், இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 3 அரைசதங்களுடன் 583 ஓட்டங்களை விளாசியுள்ளார்.
இவரது ‘ஸ்டிரைக் ரேட்’ 232.67 ஆக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அடுத்ததாக இரட்டைச் சதம் அடிப்பதே தனது இலக்கு என அண்மையில் வைபவ் சூர்யவன்ஷி பகிரங்கமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




