News

அஸ்வெசும திட்டத்தில் பயனாளிகளைத் தேர்வு செய்ய புதிய தொழில்நுட்பம்!

அஸ்வெசும’ நலன்புரிப் பயனாளிகளைத் துல்லியமாக இனங்காண்பதற்கும், பட்டியல் தயாரிக்கும் பணிகளை அதிக வினைத்திறனுடனும் துல்லியமாகவும் மேற்கொள்வதற்கும் நேற்று நிதி அமைச்சில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.

இதன்போது, தற்போது நடைமுறையிலுள்ள பயனாளிகளை இனங்காணும் முறையிலுள்ள அளவுகோல்களைத் திருத்தியமைத்தல், பணிகளை விரைவுபடுத்துதல் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பயனாளிகளைத் துல்லியமாக இனங்காண்பது குறித்து விரிவாகக் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், சட்டத் திருத்தங்களை மேற்கொள்வது போன்ற நீண்டகால நடவடிக்கைகளுடன், குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகளை இனங்காண்பது குறித்தும் இங்கு அவதானம் செலுத்தப்பட்டது.

அத்துடன், வெற்றிடங்களை நிரப்புதல், கிராம உத்தியோகத்தர்களை செயலில் ஈடுபடுத்துதல், கொடுப்பனவு முறைகளைத் திருத்தியமைத்தல் மற்றும் அது தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button