India News

நடிகர் விஜய் – சங்கீதா பரஸ்பர விவாகரத்து? சென்னையில் வழக்கறிஞர்கள் தீவிர பேச்சுவார்த்தை!

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பரஸ்பரம் பிரிவது தொடர்பாக இருதரப்பு வழக்கறிஞர்களும் சென்னையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யிடமிருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாகவும், இந்த மனு நாளை விசாரணைக்கு வர உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், பரஸ்பர சம்மதத்துடன் பிரிவதற்கு (Mutual Consent) விஜய் தரப்பு முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது.

நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது நிதி செட்டில்மெண்ட் தொடர்பாகப் பல முக்கிய விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வேட்புமனுவில் விஜய் குறிப்பிட்டுள்ள சொத்து பட்டியலின் அடிப்படையில், தனக்கும் தனது பிள்ளைகளுக்கும் சேர்த்து மொத்தம் 250

கோடி ரூபாய் செட்டில்மெண்ட் வழங்க வேண்டும் என்று சங்கீதா தரப்பில் கோரப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், மனைவிக்கு மட்டும் 35 கோடி ரூபாய் செட்டில்மெண்ட் வழங்க விஜய் ஒத்துக்கொண்டதாகவும், மகன் மற்றும் மகளைத் தானே பார்த்துக் கொள்வதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த முக்கியமான பேச்சுவார்த்தை மும்பையிலிருந்து வந்த இருதரப்பிற்கும் நெருக்கமான ஜோசியர் ஒருவரின் முன்னிலையில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

விவாகரத்து வழக்கு நாளை நீதிமன்ற விசாரணைக்கு வரவுள்ள நிலையில், நேற்றைய பேச்சுவார்த்தை அரசியல் மற்றும் திரைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

socialtv #news #vijay

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button