Sri Lanka News
நாளை மீண்டும் ஆரம்பமாகும் பாடசாலைகள்: கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் நாளை (ஏப்ரல் 20, திங்கட்கிழமை) மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கான 2026ஆம் ஆண்டுக்கான இரண்டாம் தவணையின் முதலாம் கட்டம் நாளை ஆரம்பமாகிறது.
முஸ்லிம் பாடசாலைகளின் 2026ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணையின் நான்காம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன.
புத்தாண்டு விடுமுறையின் பின்னர் மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் வழமை போன்று நாளை முதல் இடம்பெறும் என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.




