Sri Lanka News

எரிசக்தி அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றம் முன் பாரிய போராட்டம் – கடும் போக்குவரத்து நெரிசல்

மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியை பதவி விலகுமாறு கோரி இன்று நாடாளுமன்றத்திற்கு முன்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எரிசக்தி அமைச்சராக கடமையாற்றி வரும் குமார ஜயக்கொடி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதம் நடத்தப்படவுள்ளது.இந்த நிலையில் நிலக்கரி கொள்வனவில் பாரியளவு மோசடி இடம் பெற்றுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்தி வரும் பின்னணியில் இன்றைய தினம் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு போராட்ட போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, தற்போது முன்னெடுத்து வரும் போராட்டம் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பத்தரமுல்ல தியத உயனவிற்கு அருகில் நாடாளுமன்றத்திற்கு உட்பிரவேசிக்கும் சந்தியில் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக பொல்துவ சந்திப்பகுதியில் இருந்து நாடாளுமன்றம் செல்லும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டம் காரணமாக அந்த பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button