World News

ஈரானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் உயிரிழப்பு

ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் கமல் கராசி உயிரிழந்தார்.

இந்த மாத தொடக்கத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானிய அரசியல் சூழலில் ஒரு சீர்திருத்தவாத அரசியல்வாதியாக அறியப்பட்ட கராசி, ஈரானின் வெளியுறவு மூலோபாயக் குழுவின் தலைவராகவும், ஈரானின் மறைந்த அதி உயர் தலைவர் அலி கமேனியின் ஆலோசகராகவும் செயற்பட்டிருந்தார்.

1997 முதல் 2005 வரை ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றினார்.

ஈரானின் சீர்திருத்த ஆதரவு ‘ஜமாரன்’ செய்தி இணையதளம் வெளியிட்ட தகவலின்படி, ஏப்ரல் 1-ஆம் திகதி தெஹ்ரானில் உள்ள கராசியின் வீட்டை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்தத் தாக்குதலில் கராசி கடுமையாக காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

குறித்த தாக்குதலில் அவரது மனைவி கொல்லப்பட்டதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்படுகிறது.

Related Articles

Back to top button