Sri Lanka News

VAT வரி செலுத்துவோருக்கு முக்கிய அறிவிப்பு!

அனைத்து VAT வரிப் பதிவுதாரர்களும் பின்பற்ற வேண்டிய புதிய வரிப்பட்டியல் (Tax Invoice) வடிவம் மற்றும் அதன் விபரங்கள் தொடர்பான நடைமுறைப்படுத்தல் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

2025 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதியிடப்பட்ட 2463/05 ஆம் இலக்க விசேட வர்த்தமானி அறிவித்தலின்படி, புதிய வரிப்பட்டியல் நடைமுறைகள் 2026 ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவிருந்தது.

எனினும், தற்போது இந்த திகதி 2026 ஜூலை 01 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வரி செலுத்துவோர் புதிய நடைமுறைகளுக்குத் தங்களை முழுமையாகத் தயார்படுத்திக் கொள்வதற்கும், தொழில்நுட்ப ரீதியான மாற்றங்களை மேற்கொள்வதற்கும் ஏதுவாக இந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இதன்படி, ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அனைத்து வற் வரிப் பதிவுதாரர்களும் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள புதிய நிபந்தனைகளுக்கு அமையவே வரி விலைப்பட்டியல்களை வழங்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button