Sri Lanka News

சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நிறைவு

இம்முறைக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக் காலம் நேற்று (30) நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளது.

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, சிவனொளிபாதமலையின் உச்சி மழுவில் பல விசேட மத வழிபாட்டுத் திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக ஸ்ரீ பாதஸ்தானாதிபதி வணக்கத்திற்குரிய பெங்கமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.

சிவனொளிபாதமலை உச்சி மழுவில் நடைபெற்ற மத வழிபாடுகளைத் தொடர்ந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த புனித தாதுக் கரண்டகம், சமன் தெய்வத்தின் சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் ஆகியன 4 வீதிகள் ஊடாக பெல்மடுல்ல, கல்பொத்தாவல ஸ்ரீ பாத ரஜமகா விகாரைக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படவுள்ளதாக பெங்கமுவே தம்மதின்ன தேரர் கூறினார்.

இதற்கமைய, இரத்தினபுரி வீதி வழியிலான ஊர்வலம் சிவனொளிபாதமலை உச்சி மழுவிலிருந்து கல்பொத்தாவல ஸ்ரீ பாத ரஜமகா விகாரையை நோக்கி இன்று (31) அதிகாலை புறப்பட்டது.

இவ்வாறு கொண்டு செல்லப்படும் புனித தாதுக் கரண்டகம், சமன் தெய்வத்தின் சிலை மற்றும் தெய்வ ஆபரணங்கள் ஆகியன சிவனொளிபாதமலை யாத்திரையற்ற காலம் நிறைவடையும் வரை அந்த விகாரையிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button