Sri Lanka News

அஸ்வெசும பயனாளிகளில் 77 சதவீதமானோர் வலுவூட்டல் திட்டத்தில் இணைப்பு

அஸ்வெசும பயனாளிகளில் சுமார் 77 சதவீதமானோர் வலுவூட்டல் (Empowerment) திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இத்திட்டம் 2023 ஆம் ஆண்டு முதல் உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் முன்னோடித் திட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக, சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தம்மிக முத்துகல குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கியின் கீழ் நடைமுறையில் உள்ள திட்டத்தின் மூலம் 10,975 பயனாளி குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், அதில் சுமார் 40 சதவீதமானோர் இதுவரை திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆசிய அபிவிருத்தி வங்கி 13 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையில் 10,300 குடும்பங்களுக்கு வலுவூட்டல் வழங்கும் முன்னோடித் திட்டத்தை செயல்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலுவூட்டல் திட்டங்கள், அஸ்வெசும பயனாளிகளை சுயதொழில் மற்றும் நிலையான வருமான வாய்ப்புகளுக்குத் திருப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button