Sri Lanka News
இரு பிள்ளைகளின் தாய் கோர விபத்தில் மரணம்- இரு ஆண்கள் படுகாயம்!

குருநாகல் – நாரம்மலை பிரதேசத்தில் நேற்று மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
அதிவேகமாக மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தியமையே இந்த விபத்துக்குக் காரணம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் ஒரு மோட்டார் சைக்கிளில் பயணித்த நாரம்மலை பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடைய, இரண்டு பிள்ளைகளின் தாயாரே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அதே பிரதேசத்தைச் சேர்ந்த 28 மற்றும் 34 வயதுடைய உறவினர்களான இரு ஆண்களே மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களாவர்.
விபத்தில் படுகாயமடைந்த இவ்விருவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




