Sri Lanka News

இலங்கை மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு வழிகாட்டிய ஜாம்பவான் குமார் சங்கக்கார!

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் மாற்றுக்களுக்கான குழுவின் உறுப்பினரும், முன்னாள் கேப்டனுமான கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கார, இலங்கை ஒப்பந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளை நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.​

இந்தச் சந்திப்பில் இலங்கை மகளிர் தேசிய அணி, ‘ஏ’ அணி மற்றும் 19 வயதுக்குட்பட்ட அணியின் ஒப்பந்தம் செய்யப்பட்ட வீராங்கனைகள் பலரும் கலந்துகொண்டனர்.

​இதன்போது, சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு வெற்றிகரமான வீராங்கனையாகத் திகழ்வதற்குத் தேவையான குழுப்பணி ஒழுக்கக் கட்டுப்பாடு (Discipline) மற்றும் விளையாட்டுத் துறைக்கு உள்ளேயும் வெளியேயும் எவ்வாறு ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை கட்டியெழுப்புவது என்பது குறித்து குமார் சங்கக்கார தனது அனுபவப் பகிர்வுகளுடன் கூடிய முக்கிய ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினார்.​

இலங்கை மகளிர் கிரிக்கெட்டை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த விசேட வழிகாட்டுதல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.​

Related Articles

Back to top button